"சிமி" அமைப்பு தடை விதித்த விவகாரம் - குன்னூரில் விசாரணை துவக்கம்

"சிமி" அமைப்பு தடை விதித்த விவகாரம் குறித்த தீர்ப்பாய விசாரணை குன்னுாரில் நடக்கிறது.

Update: 2019-06-23 01:08 GMT
"சிமி" அமைப்பு தடை விதித்த விவகாரம் குறித்த தீர்ப்பாய விசாரணை குன்னுாரில் நடக்கிறது. சிமி எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை கடந்த  ஜனவரி 31ம் தேதியுடன் முடிவுக்கு வந்ததால் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தலைமையிலான தீர்ப்பாயம் பல்வேறு இடங்களிலும் இதற்கான விசாரணையை நடத்தி வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னுாரில் நேற்று தொடங்கிய விசாரணை, 3 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி குன்னுார் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கு நீதிமன்ற வளாகமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக, நீதிபதி முக்தா குப்தா தலைமையிலான 22 பேர் அடங்கிய குழுவினர் வந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்