இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு தான் இருப்போம் - கலைச்செல்வன், எம்எல்ஏ
விருத்தாசலம் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ கலைச்செல்வன், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனை சந்தித்து தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து மனு அளித்தார்.;
விருத்தாசலம் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ கலைச்செல்வன், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனை சந்தித்து தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து மனு அளித்தார். பின்னர் கலைச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், டி.டி.வி.தினகரன் அமமுக கட்சி ஆரம்பித்து அதனை பதிவு செய்த பின், அவருடனான தொடர்பை துண்டித்து விட்டேன் என்றார். இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு தான் இருப்போம் என்ற அவர், முதலமைச்சரை சந்திப்பதற்கு அவசியம் ஏற்பட்டால் நிச்சயமாக சந்திப்பேன் என்றார்.