கிட்னி தானம் செய்தால் 3 கோடி, முன் பதிவு செய்ய ரூ7,500 - நூதன மோசடி

பிரபல தனியார் மருத்துவமனை பெயரில் போலியான இணையதள முகவரியை உருவாக்கி நூதன முறையில் பலரை ஏமாற்றிய வடமாநில கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-06-04 06:03 GMT
ஈரோடு சம்பத் நகரில் பிரபல தனியார் கிட்னி  கேர் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் இணையதள முகவரியில் சிறிய மாற்றம் செய்து போலி இணையதள முகவரியை உருவாக்கிய மர்ம கும்பல் ஒன்று கிட்னி தானம் செய்தால் 3 கோடி ரூபாய் வழங்கப்படும் என விளம்பரம் செய்துள்ளது. அதற்காக 7 ஆயிரத்து 500 ரூபாய் முன் பணம் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படி பணம் செலுத்திய பலர் மருத்துவமனைக்கு வந்து விவரம் கேட்டு சென்றுள்ளனர். இதனை கேட்டு அதிர்ந்து போன மருத்துவமனை நிர்வாகம் போலீஸில் புகார் அளித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தேசிய மருத்துவமனை ஆணையத்திலும் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் போலியான இணைய தள முகவரியை உருவாக்கியது வடமாநில கும்பல் என்பது தெரிய வந்துள்ளது. கோடிக்கணக்கில் ஆசை காட்டி நூதன மோசடி செய்த வடமாநில கும்பலை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஈரோடு நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    
Tags:    

மேலும் செய்திகள்