கல்லூரியில் சேர வசதி இல்லாத ஏழை மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் உதவி

கல்லூரியில் சேர வசதி இல்லாத ஏழை மாணவிக்கு முதலாம் ஆண்டு கல்லூரி கட்டணத்தை செலுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உதவியுள்ளார்.

Update: 2019-06-02 23:01 GMT
கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம், செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் அனுசுயா.  சிறுவயதிலேயே தந்தையை இழந்த அனுசுயா, கூலி வேலை செய்துவரும் தாயாரின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். பள்ளி பொதுத்தேர்வில் 800 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி அடைந்த நிலையில், தொடர்ந்து கல்லூரியில் படிக்க வசதி இல்லை. இந்த நிலையில் படிப்பில் ஆர்வம் கொண்ட அனுசுயா, அரசு கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால் பொருளாதார நிலை காரணமாக, அவர் கல்லூரியில் சேர முடியாத நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்கு தெரியவந்தது. உடனடியாக அந்த  மாணவியை ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்த மாவட்ட ஆட்சியர்  அன்பழகன், அனுசுயாவுக்கு முதலாம் ஆண்டு கல்லூரி கட்டணத்தை வழங்கி கல்லூரியில் சேர வழியனுப்பி வைத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்