ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆட்டு சந்தை : ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

கிருஷ்ணகிரி குந்தாரபள்ளி ஆட்டு சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது

Update: 2019-06-01 03:39 GMT
கிருஷ்ணகிரி குந்தாரபள்ளி ஆட்டு சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.
குந்தாரப்பள்ளியில் நடைபெறும் கால்நடை விற்பனை சந்தை மிகவும் பிரபலம் . இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆட்டு சந்தை நேற்று நடந்தது. இதில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை என மொத்தம் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. இந்த ஆடுகளை ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் சென்றனர். ஆடுகள் நல்ல விலை போனதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று மட்டும் சந்தையில் ஒன்றரை கோடி ​ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்