இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

Update: 2019-05-28 02:41 GMT
காவிரி மேலாண்மை ஆணைய 3-வது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் இன்று காலை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். கூட்டத்தில், "தமிழகத்துக்கு திறந்து விட வேண்டிய 9.19 டி.எம்.சி. தண்ணீரை ஜூன் 1-ந் தேதி முதல் திறந்து விட வேண்டும் என தமிழகம் வலியுறுத்தும் என தெரிகிறது. இதே போல மேக தாது அணை உள்ளிட்ட விவகாரங்களையும் தமிழகம் எழுப்பும் என தெரிகிறது. அதிக மழை பெய்தால் மட்டுமே தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறக்க முடியும் என கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா தெரிவித்திருந்த நிலையில், இன்று காவிரி மேலாண்மை வாரிய கூட்டம் நடைபெறுகிறது. காவிரியில் தண்ணீர் திறக்கப்படுமா என்பது இன்றைய கூட்டத்தில் முடிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்