இரண்டரை வயது சிறுமி, நினைவாற்றலில் அசத்தல் - இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்

நினைவாற்றலில் அசத்தும் இரண்டரை வயது சிறுமி, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பிடித்துள்ளார்.

Update: 2019-05-26 23:02 GMT
நினைவாற்றலில் அசத்தும் இரண்டரை வயது சிறுமி, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பிடித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் வீராசாமி தெருவில் வசிக்கும், நித்தியானந்தம் - திவ்யா தம்பதியரின், இரண்டரை வயது மகள் லித்திகா. ஒரு வயது முதல் லித்திகாவின் தாய் திவ்யா அளித்த பயிற்சியால், ஆசிய நாடுகளின் கொடிகள், இந்தியாவில் உள்ள மாநிலங்களின் தலைநகரங்கள், ஆங்கில மாதங்கள், தமிழ் மாதங்கள், வாரத்தின் நாட்கள்,  திருக்குறல் ஒப்புவித்தல் என்று, 35 வகையான  தலைப்புகளில், தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் லித்திகா பேசி, அசத்துகிறார். நினைவாற்றல் குறித்த சோதனைகளுக்காக, 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' பதக்கம், சான்றிதழ், அடையாள அட்டை வழங்கி சிறுமி லித்திகாவை  கௌரவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்