கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகையை காண சென்ற மாணவர்கள் - தேனிக்கள் கொட்டியதால் மருத்துவமனையில் அனுமதி

கல்வி சுற்றுலா சென்றபோது தேனீக்கள் கொட்டியதால் மாணவ, மாணவியர்கள் பாதிக்கப்பட்டனர்

Update: 2019-05-16 08:19 GMT
திருவள்ளூரில் தமிழ்நாடு அறிவியல் கழகம் சார்பில் ஆண்டு தோறும் கோடைக் காலத்தின் போது அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் வரலாற்று சுவடுகளை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் அறிவியல் கண்காட்சிக்கு அழைத்து செல்வது வழக்கம். இந்நிலையில் தமிழ்நாடு அறிவியல் கழக நிர்வாகிகள் வேலாயுதம்,  முத்துக்கிருஷ்ணன் ஆகியோரது தலைமையில் திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என மொத்தம் 50 பேர் பூண்டி அருகே  உள்ள கற்கால மனிதர்கள் வாழ்ந்த  குகையை  நேற்று நண்பகலில் பார்வையிட சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த தேனீக்கள், சுற்றுலா வந்த மாணவ மாணவியர்களை கொட்டியுள்ளது. இதில் வழக்கறிஞர் எழிலரசன், கல்யாணி, ஜெனிஃபர்,  9 வயது சிறுவன் செழியன்,   ஹரிணி,  பவதாரணி, உமா உள்ளிட்ட 8 பேர் சுய நினைவின்றி மயங்கி விழுந்துள்ளனர். இதனைப் பார்த்த  மாணவ,  மாணவியரும் தேனிக்கு பயந்து சிதறி ஓடியுள்ளனர். இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் மயங்கிக் கிடந்தவர்களை, பத்திரமாக மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி​வைத்தனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உரிய முன்னெச்சரிக்கையுடன் சுற்றுலா செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்