தோல்வி பயத்தை மறைக்கவே மனைவியுடன் ஸ்டாலின் சுற்றுலா சென்றுள்ளார் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமர்
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமர்வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமர், எம்.சி. சம்பத் ஆகியோர் மதுரை பெருங்குடி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பேசிய உதயகுமார், 23 ஆம் தேதிக்கு பிறகு திமுக ஆட்சியை அமைப்போம் என்று கூறும் திமுக தலைவர் ஸ்டாலின் கனவு பலிக்காது என்றார். தோல்வி பயத்தை மறைக்கவே மனைவியுடன் ஸ்டாலின் சுற்றுலா சென்றுள்ளதாகவும் விமர்சனம் செய்தார். அமைச்சர் எம்.சி.சம்பத் பேசுகையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகம் என்று கூறியதுடன், ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றும் வாக்குறுதி அளித்தார்.