கடற்சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் முன்னெச்சரிக்கையாக கடலுக்குள் செல்லவில்லை

Update: 2019-04-26 12:10 GMT
ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் கடற்சீற்றம் அதிகரிக்கும் என்றாலும், தற்போது வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடற்சீற்றம் அதிகரித்துள்ளதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.இந்த நிலையில் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்க கடற்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று  மீனவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். அதன் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், நாட்டுப்படகுகள், 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகளும்  கரை திரும்பிய வண்ணம் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்