8 மாத குழந்தையுடன் கடலில் மூழ்கிய இளம்பெண்

பெற்றோர் பேச மறுத்ததால், காதல் திருமணம் செய்த பெண், 8 மாத குழந்தையுடன் கடலில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update: 2019-04-24 08:20 GMT
கடலூர் அருகே தேவனாம்பட்டினத்தில் உள்ள கடற்கரையில் வேகமாக நடந்து சென்ற பெண், கைக் குழந்தையுடன் கடலில் மூழ்கினார். அதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசார் கடலில் மூழ்கிய பெண்ணை குழந்தையுடன் மீட்டு கரை சேர்த்தனர். உடனடியாக கடலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்களை பரிசோதனை செய்ததில் குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. கடலில் மூழ்கியதில் குழந்தை இறந்ததா, அல்லது கொலையா என்பது போலீசாரின் சந்தேகம்.
Tags:    

மேலும் செய்திகள்