தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா

சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.;

Update: 2019-04-24 08:03 GMT
சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள வடக்குப்பேட்டை  தண்டுமாரியம்மன் கோயிலில்,  பூச்சாட்டுதலுடன், அத்திமர கம்பம் நடப்பட்டு கடந்த 11ஆம் தேதி விழா தொடங்கியது. 

இதையடுத்து கோயிலில் தினமும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில் காலை பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பவானி ஆற்றில் இருந்து தாரை, தப்பட்டை முழங்க தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. 

தொடர்ந்து கோயில் பூசாரி தீக்குண்டத்தில் மலர்களை தூவி, சிறப்பு பூஜைகள் செய்து முதலில் குண்டம் இறங்கினார். அவரைத் தொடர்ந்து ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்