மருத்துவ விடுப்பில் இருந்த பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மருத்துவ விடுப்பில் இருந்த பெண் காவலர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.;

Update: 2019-04-12 22:09 GMT
புதுசெந்நெல்குளம் கிராமம் அருகே அமுதவள்ளி என்ற பெண் காவலருக்கு எட்டு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்த நிலையில்,  அவர் மருத்துவ விடுப்பில் உள்ளார்.அமுதவள்ளி கணவரும் காவலராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த சூழலில்,  அவர்  தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வன்னியம்பட்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்