அமமுகவினர்பணம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு -அமமுகவினரை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த அதிமுகவினர்

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், அமமுகவினர், வீடு வீடாகச் சென்று ஏப்ரல் 16ம் தேதி பரிசு பெட்டகம் வரும் என்று கூறி வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது.

Update: 2019-04-11 05:29 GMT
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், அமமுகவினர், வீடு வீடாகச் சென்று ஏப்ரல் 16ம் தேதி பரிசு பெட்டகம் வரும் என்று கூறி வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது. அப்போது, வாக்காளர்களின் விவரங்களையும் கேட்டு வாங்கியதாக தெரிகிறது.  இந்த தகவலை அறிந்த அப்பகுதி பாஜக மற்றும் அதிமுகவினர் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று அமமுக கட்சியினரை பிடித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களின் செல் எண்ணை பெற்று கொண்ட அதிகாரிகள் தாங்கள் அழைக்கும்போது விசாரணைக்கு வரவேண்டும் என அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்