ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் : சிதம்பரம் கோயில் தீட்சிதர் கோரிக்கை...
ராஜராஜ சோழனுக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் கோரிக்கை விடுத்துள்ளார்.;
மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜராஜ சோழனுக்கு சமாதி உள்ள தஞ்சை மாவட்டம் உடையாளூரில், அவருக்கு மணி மண்டபம் அமைய வேண்டும் என்பதே வெங்கடேச தீட்சிதரின் கோரிக்கை. அப்படிக் கட்டப்பட்டால் அது தமிழர்களின் வரலாற்று சின்னமாக திகழும் எனவும் அவர் தெரிவித்தார்.