பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என கூறி சொகுசு காரில் வலம் வந்த நபர் போலீசில் ஒப்படைப்பு...

பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என கூறி சொகுசு காரில் வலம் வந்த நபரை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.;

Update: 2019-02-05 22:15 GMT
பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என கூறி சொகுசு காரில் வலம் வந்த நபரை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். உயர்நீதிமன்ற வளாகத்தில் அந்த நபர் வேகமாக காரை ஒட்டி சென்ற போது மோதி 2 வழக்கறிஞர்கள் காயமடைந்தனர். இதையடுத்து காரை மடக்கி அதிலிருந்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையின் போது அந்த நபர்  போலி அடையாள அட்டையை காட்டியுள்ளார். அவருடைய காரில் நாடாளுமன்றம், , சிபிஐ , சர்வதேச போலீஸ் என  பல ஸ்டிக்கர்களை வைத்திருப்பதும், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என கூறி வந்ததும் தெரிய வந்தது.
Tags:    

மேலும் செய்திகள்