பிளாஸ்டிக் கலந்த உணவுகளை உண்ணும் யானைகள் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேதனை

முதுமலை சரணாலயத்தில் பிளாஸ்டிக் கலந்த உணவுகளை யானைகள் உண்கின்றன என்று ராசிபுரத்தில் நடைபெற்ற மனிதநேய வார விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு வேதனை தெரிவித்தார்.

Update: 2019-01-28 19:46 GMT
முதுமலை சரணாலயத்தில் பிளாஸ்டிக் கலந்த உணவுகளை யானைகள் உண்கின்றன என்று ராசிபுரத்தில் நடைபெற்ற மனிதநேய வார விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு வேதனை தெரிவித்தார். ராசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற  விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட அவர்,  மாணவர்களிடம் உரையாற்றுகையில்,  பிளாஸ்டிக் கலந்த உணவுகளை உண்பதால், யானைகள் உடல் உபாதைகளுக்கு உள்ளாவதாகவும், உடற்கூறு ஆய்வின் போது யானை வயிற்றில் அதிகளவில் பிளாஸ்டிக் குப்பைகள் இருக்கின்றன என்றும் வேதனையுடன் குறிப்பிட்டவர்,  தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்படுத்த விதித்துள்ள தடை வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்