என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக கருப்புக் கொடி
நிலம் கையகப்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு;
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கருப்பு கொடியேற்றி, போராட்டத்தில் ஈடுபட்டனர். என்எல்சி நிறுவனம், 3 வது சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக விருத்தாசலம் மற்றும் புவனகிரி வட்டாரங்களில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகர ஆலம்பாடி கிராம சபை கூட்டத்தில் என்எல்சிக்கு நிலம் வழங்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.