ரயிலில் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் கடத்தல் : ரயில்வே ஊழியர்களுக்கு தொடர்பா?
மும்பையில் இருந்து சென்னை வந்த ரயிலில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப் பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மின்சாதனப் பொருட்கள், செல்போன் உதிரி பாகங்கள், விலை உயர்ந்த கைக்கடிகார உதிரி பாகங்களை கைப்பற்றப்பட்டுள்ளன.;
மும்பையில் இருந்து சென்னை வந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப் பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மின்சாதனப் பொருட்கள், செல்போன் உதிரி பாகங்கள், விலை உயர்ந்த கைக்கடிகார உதிரி பாகங்களை கைப்பற்றப்பட்டுள்ளன. ரகசிய தகவலின் அடிப்படையில், சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரி ரவீந்திரநாத் வர்மன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டதில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 231 பெட்டிகளை பறிமுதல் செய்ததுடன், இந்த கடத்தலில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பார்சல் சர்வீஸ் ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.