விருதுநகரில் சிறுவர்கள் மீது தாக்குதல் - 4 சிறார்கள் கைது
விருதுநகர் அருகே சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில், 4 சிறார்களை போலீசார் கைது செய்து, கூர் நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.ஒண்டிப்புலி நாயக்கனூரில் கஞ்சா புகைப்பதை காட்டிக்கொடுத்ததாக 2 சிறுவர்களை, 4 சிறுவர்கள் சேர்ந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக 4 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் மதுரை காமராஜர் சாலையில் உள்ள சிறார்கள் கூர் நோக்கு இல்லத்தில் சிறுவர்களை ஒப்படைத்தனர்.
Next Story
