"ஜாக்டோ - ஜியோ வுடன் பேச்சுவார்த்தை" - தமிழக அரசுக்கு திருநாவுக்கரசர் கோரிக்கை
அகில இந்திய மாணவர் காங்கிரஸின் முதன்மை செயல் திட்டமான 'பேத்தார் பாரத்' எனப்படும் 'சிறப்பான இந்தியா' திட்டத்தின் தொடக்கவிழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.;
அகில இந்திய மாணவர் காங்கிரஸின் முதன்மை செயல் திட்டமான 'பேத்தார் பாரத்' எனப்படும் 'சிறப்பான இந்தியா' திட்டத்தின் தொடக்கவிழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள
ஜாக்டோ - ஜியோ அமைப்பினருடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் என்று கூறினார். போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக சம்பளம் பிடித்தம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.