எம்ஜிஆர் பிறந்தநாள் விழா : அதிமுக, அமமுக தொண்டர்கள் இடையே வாக்குவாதம்

எம்ஜிஆரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவிக்க வந்த அதிமுக, அமமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2019-01-17 10:22 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எம்ஜிஆரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவிக்க வந்த அதிமுக, அமமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கண்டு குளம் என்ற கிராமத்தில் நடந்த இந்த சம்பவத்தில் இரு கட்சியினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அப்போது அமமுகவினர் மாலை அணிவிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்