ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், அங்கு பணிபுரிந்த பணியாளர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார்.

Update: 2019-01-07 10:42 GMT
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசு முடிவு செய்த நிலையில் அரசாணை போதாது என்றும், அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என தாம் பலமுறை கூறியதாக தெரிவித்தார். 

அரசு உடனே அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றாலும் ஆலை திறக்கப்படாது என்றார். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக கூறினார். மேலும் அங்குள்ள பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்பதிலும் அரசு தீவிரமாக இருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்