கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் பணம் பறிப்பு - செக்யூரிட்டிகளே பணம் பறித்தது அம்பலம்

பழனி கோவிலுக்கு வந்த பக்தர்களை ஏமாற்றி, கோவில் செக்யூரிட்டிகளே பணம் பறித்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2019-01-05 18:52 GMT
பழனி கோவிலுக்கு வந்த பக்தர்களை ஏமாற்றி, கோவில் செக்யூரிட்டிகளே பணம் பறித்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தங்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு வேலூர் மாவட்டத்தில் இருந்து 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக வந்துள்ளனர். ஆனால் அவர்களிடம் செக்யூரிட்டியாக வேலை பார்த்த ஒருவர் 1200 ரூபாய் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. அரசின் இலவச தங்கும் விடுதியில் பணத்தை பெற்றுக் கொண்டு செக்யூரிட்டிகள் மோசடி செய்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்