மயங்கி விழுந்த கல்லூரி மாணவி மர்ம மரணம்
சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த மகிமா என்ற கல்லூரி மாணவி, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த மகிமா என்ற கல்லூரி மாணவி, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில் விளையாடிக் கொண்டிருந்தபோது மகிமா , மயங்கி விழுந்ததை கண்ட சக மாணவ, மாணவிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் பாதி வழியிலே அவர் உயிரிழந்துள்ளார்.