நிலத்தை அபகரித்து கொண்டு உணவு அளிக்காத மகன்கள் : கைவிட்ட பிள்ளைகளுக்கு பாடம் புகட்டிய ஆட்சியர்

பெற்றோரின் நிலத்தை அபகரித்துகொண்டு, அவர்களுக்கு உணவு கூட வழங்காத மகன்களுக்கு பாடம் புகட்டும் விதமாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2018-11-27 03:56 GMT
திருவண்ணாமலையை அடுத்த வேடந‌த்தம் பகுதியைச் சேர்ந்த கண்ண‌ன் பூங்காவனம் தம்பதிகள், பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து சம்பாதித்த 5 ஏக்கர் நிலத்தை, தங்களின் மகன்கள் பழனி மற்றும் செல்வம் ஆகியோருக்கு பகிர்ந்து அளித்துள்ளனர். நிலங்களை பெற்றுகொண்ட மகன்கள், உணவு கேட்டால் கூட வழங்கவில்லை என கூறப்படுகிறது.  வேதனை அடைந்த கண்ண‌ன், தான் விவசாயம் செய்து பிழைத்து கொள்வதாக கூறி, மகன்களிடம், நிலத்தில் ஒரு சிறிய பகுதியை கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த மகன்கள், முதியவர் என்றும் பாராமல் கண்ண‌னை அடித்து உதைத்துள்ளனர். இதனால் கண்ண‌ன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை அணுகியுள்ளார். விவரத்தை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு, மொத்த நிலத்தையும் கண்ண‌ன்-பூங்காவனம் தம்பதியின் பெயருக்கு மாற்றி கொடுத்துள்ளார். இந்த நடவடிக்கை, பெற்றொரின் சொத்தை அபகரத்துகொண்டு, கவனிக்க தவறும் பிள்ளைகளுக்கு பாடமாக அமையும் என அவர் எச்சரித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்