சென்னை மெரினா சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவுக்கு திறப்பு விழா நடத்த தடை

சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு திறப்பு விழாவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Update: 2018-11-19 12:53 GMT
* நெடுஞ்சாலைத்துறை விதிகளை மீறி சென்னை காமராஜர் சாலையில்  எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு அமைப்பதாகவும், அதற்கு தடை விதிக்க கோரி கோரியும் வழக்கறிஞர் தினேஷ் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

* இது தொடர்பாக நீதிபதி சத்யநாரயணன் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பாதசாரிகளுக்கு இடையூறு இல்லாமல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படுவதாக கூறினார். 

* அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், எவ்வளவு செலவிடப்படுகிறது என கேள்வி எழுப்பியனர். அதற்கு, 2 கோடியே 52 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்படுவதாக  தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். 

* இதையடுத்து, பல்வேறு திட்டங்களுக்காக ஆர்ஜிதம் செய்த நிலங்களுக்கு 845 கோடி ரூபாய் வழங்கவில்லை என தொடரப்பட்ட வழக்குகளை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், இதற்கு வட்டியாக பொது மக்களின் வரிப்பணம் செலவிடப்படுவதாக கண்டனம் தெரிவித்தனர்.  
 
* இதைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளித்த நீதிபதிகள் அதன்  திறப்பு விழாவுக்கு தடை விதித்தனர். இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டதோடு,  வழக்கு விசாரணையை ஜனவரி 21ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். 



Tags:    

மேலும் செய்திகள்