"அனந்தகுமார் மறைவு, வேதனை அளிக்கிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவு செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;

Update: 2018-11-12 09:19 GMT
மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவு  செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இளம் வயதில் சமூக பணியில் ஆர்வம் கொண்டு அரசியலுக்கு வந்த அவர், கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பெங்களூரு தெற்கு தொகுதியில் 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக்குரியவர் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், உள்ளிட்ட தமிழக தலைவர்களும் அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்