நிமோனியா, வயிற்றுப்போக்கு- 2.6 லட்சம் குழந்தைகள் பலி

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நிமோனியா மற்றும் வயிற்று போக்கின் காரணமாக இரண்டரை லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2018-11-10 09:45 GMT
கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நிமோனியா மற்றும்  வயிற்று போக்கின் காரணமாக இரண்டரை  லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 12 ஆம் தேதி உலக நிமோனியா தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு,  இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2016 ஆண்டு இந்தியாவில் நிமோனியா என்ற நுரையிரல் பாதிப்பால் 1லட்சத்து 58 ஆயிரத்து 176 குழந்தைகளும், வயிற்று போக்கினால் 1 லட்சத்து இரண்டாயிரத்து 813 குழந்தைகள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதிலும் 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் அதிக அளவில் உயிரிழப்பது இந்தியாவில் தான் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்