தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2018-10-30 06:09 GMT
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கத்தமிழ்செல்வன், தினகரன் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்