14 கோடி மதிப்பிலான மருத்துவமனை கட்டிடங்கள் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 3 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.;
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 3 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவு கட்டிடம், மற்றும் சீமாங் மைய அறுவை அரங்கம் ஆகியவற்றை காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம், கடலூர் மாவட்டம் வேப்பூர் மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை கட்டிடத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இதேபோல் 14 கோடியே 35 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்வேறு மருத்துவமனை கட்டிடங்களையும் முதலமைச்சர் திறந்துவைத்தார்.