ராயபுரம் பகுதியில் கத்தியை காட்டி வழிப்பறி : 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது
சென்னை ராயபுரம் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு 4 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை சிலர் வழிப்பறி செய்துள்ளனர்.;
சென்னை ராயபுரம் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு 4 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை சிலர் வழிப்பறி செய்துள்ளனர். இது தொடர்பாக ராயபுரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட, 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரேம்குமார், காசிமேடு பகுதியை சேர்ந்த மதன் மற்றும் 2 சிறுவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.