கடந்த ஒரு ஆண்டில் இந்தியாவில் ஊழல் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல்

கடந்த ஒரு ஆண்டில், இந்தியாவில் ஊழல் அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

Update: 2018-10-11 09:04 GMT
இது தொடர்பாக, Transparency International India என்ற நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 56 சதவீதம் பேர், கடந்த ஆண்டில் தாங்கள், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். இதற்கு முந்தைய ஆய்வின் போது, 46 சதவீத மக்கள் மட்டுமே, லஞ்சம் கொடுப்பதாக தெரிவித்திருந்தனர்.

அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், அதுகுறித்து அரசிடம் புகார் தெரிவிக்க முறையான தொலைபேசி உதவி எண்கள் இல்லை என 91 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.லஞ்சத்தை ரொக்கப்பணமாக மட்டுமே கொடுக்கிறோம் என 39 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். ஏஜென்டுகள் மூலமாக லஞ்சம் கொடுப்பதாக 25 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். லஞ்சம் ஊழலை ஒழிக்க, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும், அப்படியே சட்டம் இயற்றப்பட்டாலும் அதனால் பெரிய பலன் இல்லை என்றும் 48 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் மூலம், முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டில், ஊழல் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்