நவராத்திரி விழா - கோவில்களில் சிறப்பு பூஜை...

நவராத்திரி விழாவையொட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2018-10-11 03:04 GMT
நவராத்திரியை ஒட்டி கொலு கண்காட்சி

இதே போல் திருச்சி திருவாணைக்காவல் அகிலாண்டேசுவரி உடனுறை ஜம்புகேசுவரர் கோயிலில்  நவராத்திரி விழா கோலாகலமாக  தொடங்கியது. முதலாம் திருநாளான நேற்று  ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி தாயார்,  ராஜ அலங்காரத்தில் உள்வீதி உலா வந்து, கொலுமண்டபத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி வாகன மண்டபத்தில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது இருப்புறமும் திரண்டு இருந்து பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் முழுங்க கற்பூர ஆரத்தி எடுத்தும் மனம் உருகி சுவாமி தரிசனம் செய்தனர். 

ராமநாதசாமி கோயிலில் நவராத்திரி விழா 

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு அம்பாள் பர்வதவர்த்தினி அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து  மகா தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. வடமாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் உள்பட ஏராளமானோர் அன்னபூரணி அம்பாளை தரிசனம் செய்தனர். கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள  கொலுவையும் பக்தர்கள் கண்டு களித்தனர்.

முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முதல் நாளான நேற்று அம்மன் வீதி உலா...

இரவு முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில், துர்க்கை கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.




Tags:    

மேலும் செய்திகள்