சென்னை கோட்டையை முற்றுகையிட முயன்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 3,000 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், சென்னையில் கோட்டையை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

Update: 2018-10-04 22:42 GMT
7 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத்தொகையை உடனே வழங்க கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், சென்னையில் கோட்டையை நோக்கி ஊர்வலமாக சென்றனர். பல்லவன் இல்லத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தில், தொமுச -  சி.ஐ.டி.யூ, - உள்ளிட்ட 10 தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோட்டையை முற்றுகையிட முயன்ற தொழிலாளர்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, முழக்கம் எழுப்பினர். சுமார் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். 

அக். 8 - ல் போராட்ட அறிவிப்பு வெளியிட முடிவு

இதனிடையே, போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், வருகிற 8 ம் தேதி வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிட முடிவு செய்துள்ளனர். கோட்டை முற்றுகை போராட்டத்திற்குப்பின் கூடிய போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு, தொ.மு.ச உள்பட 10 தொழிற்சங்க தலைவ ர்கள், ஒப்புதல் அளித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்