செல்போனை எடுக்க முயற்சித்து கிணற்றுக்குள் விழுந்த இளைஞர்...

கிணற்றில் தவறி விழுந்த செல்போனை எடுக்க முயற்சித்து கிணற்றுக்குள் விழுந்த இளைஞர்...;

Update: 2018-10-02 23:33 GMT
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்து எங்குமாம்பட்டியை சேர்ந்த அன்பழகன் என்பவர் தனது செல்போனை 60 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் கை தவறி போட்டுள்ளார். செல்போனை எடுக்க முயற்சித்த அன்பழகன் தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார். அன்பழகனின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி அன்பழகனை மேலே கொண்டு வந்தனர். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்