திருமூர்த்தி அணையில் பாதுகாப்பு கருதி கம்பிவேலி - ரூ.34.5 லட்சம் செலவில் அமைப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் பாதுகாப்பு கருதி 34.5 லட்சம் ரூபாய் செலவில் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது.;
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் பாதுகாப்பு கருதி 34.5 லட்சம் ரூபாய் செலவில் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, அதிகாரிகளுடன் நேரில் சென்று அணையை பார்வையிட்டனர். விரைவில் சுற்றுலாத்தளமாக உயர்த்தப்படும் எனவும், பார்க்கிங் மற்றும் படகு வசதிகள் செய்து தரப்படும் எனவும் அமைச்சர் பேட்டியின் போது தெரிவித்தார்.