ஓட்டுனர் உரிமம் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பம்...

ஒட்டுனர் உரிமம் பெறுவது தொடர்பான அனைத்து சேவைகளையும் இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி பொது மக்கள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-09-30 06:37 GMT
* தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் வாகனங்களுக்கான பதிவு கட்டணம், வரி உள்ளிட்டவற்றை இணையத்தில் செலுத்தும் வசதி நடைமுறையில் உள்ளதாக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* இந்நிலையில் நாளை முதல் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் ஒட்டுனர் உரிமம் பெறுவது தொடர்பான அனைத்திற்கும் இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி பொது மக்கள் பயன்பெறலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. 

* அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சி மையங்கள்  மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும், ஆன்லைன் மூலம் மனுவை பூர்த்தி செய்து,  கட்டணத்தை செலுத்தி அதற்கான ரசீதுடன் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு சென்று தகுந்த டெஸ்ட், புகைப்படம் எடுத்து ஓட்டுனர் உரிமத்தை பெற்று கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் காத்திருப்பு மற்றும் காலவிரயம் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்