பள்ளி மாணவனுடன் காதல் கொண்ட கேரள ஆசிரியை...

பள்ளி மாணவனுடன் காதல் கொண்டு சென்னைக்கு ஓடி வந்த ஆசிரியையை, சென்னை போலீசாரின் உதவியோடு கேரள போலீசார் அழைத்துச் சென்றனர்.;

Update: 2018-09-29 02:38 GMT
கேரள மாநிலம்  ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த டியோரனா தம்பி என்பவர், பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 23ஆம் தேதி இவர்கள் சென்னைக்கு வந்து ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். கேரளாவில் மாணவனை காணாத பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் ஆசிரியையுடன் மாணவன் சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து  சென்னை வந்த கேரள போலீசார், இருவரையும் மீட்டு கேரளாவிற்கு அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்