சோட்டா ராஜனின் கூட்டாளி, கும்பகோணத்தில் ஆஜர்

சோட்டா ராஜனின் கூட்டாளி, கும்பகோணத்தில் ஆஜர் : கொலை வழக்கில் தப்பியவர், உத்தரபிரதேசத்தில் சிக்கினார்;

Update: 2018-09-27 20:43 GMT
கொலை வழக்கில் தப்பிய, மும்பை தாதா சோட்டா ராஜனின் கூட்டாளி, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த 1999ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் வேலாயுதம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 2002ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட  அவரது உறவினர் காளிராஜன், போலீஸ் பிடியில் இருந்து தப்பினார். கடந்த 16 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தரபிரதேச மாநிலத்தில் சிக்கிய அவரை, அம்மாநில போலீஸார் பாதுகாப்புடன், கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். காளிராஜன், மும்பை தாதா சோட்டாராஜனின் கூட்டாளி என்று கூறப்படுகிறது.
 

Tags:    

மேலும் செய்திகள்