திருவள்ளூர் : மீனவர்களின் முகத்துவாரத்தை தூர்வாரியது மாவட்ட நிர்வாகம்
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரத்தை அமைக்கக்கோரி மீனவர்கள் கடந்த 15 நாட்களாக மீன் பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கடந்த வாரம் முதல் முகத்துவாரத்தை தூர்வாரும் பணிகளை ஆட்சியர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். அதன் பிறகு மீனவர்கள் முன்னிலையில் முகத்துவாரம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து முகத்துவாரம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி கிடைத்த உடன் விரைவில் தொடங்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.