"மதுரை 293வது ஆதினமாக நித்தியானந்தா தொடரலாம்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை ஆதீன மடத்தின் 293- வது ஆதீனமாக நித்தியானந்தா பணியாற்றலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

Update: 2018-09-26 13:48 GMT
மதுரை ஆதீன மடத்தின் 293- வது ஆதீனமாக நித்தியானந்தா பணியாற்றலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. 
மதுரைஆதீனம் தொடர்பான வழக்கு, நீதிபதி எம்.வி. முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,
மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர, அறநிலையத்துறை சட்டப்படி, அறிநிலையத்துறை அதிகாரிகளிடம்  அனுமதி பெறவில்லை என சுட்டிக்காட்டினார். எனவே, கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த நீதிபதி எம். வி. முரளிதரன், மதுரை புதிய ஆதீனமாக நித்தியானந்தா பணியாற்றலாம் என அனுமதி அளித்து உத்தரவிட்டார். 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மதுரை ஆதீன மடத்தின் 292 வது குரு மகா சன்னிதானமாக அருணகிரி நாதர் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்