பாரம்பரியத்தை மறக்காமல் குதிரை வண்டியில் ஊர்வலம் வந்த புதுமண பட்டதாரி தம்பதியினர்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப் பாளையம் அருகே உள்ள வெள்ளாள பாளையத்தில், பாரம்பரிய முறைப்படி மணமக்கள், மாட்டு வண்டிகளிலும், குதிரை வண்டிகளிலும் ஊர்வலமாக வந்தனர்.

Update: 2018-09-12 09:38 GMT
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப் பாளையம் அருகே உள்ள வெள்ளாள பாளையத்தில், பாரம்பரிய முறைப்படி மணமக்கள், மாட்டு வண்டிகளிலும், குதிரை வண்டிகளிலும் ஊர்வலமாக வந்தனர். பொறியியல் பட்டதாரியான கவி அரவிந்த் என்பவருக்கும், எம்.சி.ஏ. பட்டதாரியான பரவீணா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. பொறியியல் படிப்பு முடித்தும், இயற்கை மீது கொண்ட நேசத்தால் விவசாயம் செய்து வந்த, என்ஜினீயர் கவிஅரவிந், தனது திருமணத்தையும் பாரம்பரிய முறைபடி நடத்த திட்டமிட்டிருந்தார். அவரது விருப்ப‌ப்படி, திருமண ஊர்வலம்  நடைபெற்றது. குதிரை வண்டியை மணமக்களே ஓட்டி வந்த‌து அனைவரையும் வியப்படைய வைத்த‌து. 
Tags:    

மேலும் செய்திகள்