தாமிரபரணி நதிக்கரையோரம் தொல்லியல் துறையினர் நேரில் ஆய்வு - அகழ்வாராய்ச்சி செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை

தாமிரபரணி நதிக்கரையோரம் உள்ள ஆதிச்சநல்லூர் பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.

Update: 2018-09-09 21:31 GMT
ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரையோரம் உள்ள ஆதிச்சநல்லூரின் சிவகளை பகுதியில் 3 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்லியல் பொருட்கள் கிடைத்து வருகின்றன. அங்குள்ள பரம்பில், கல்வெட்டுகள், மண் தாழிகள், நடுகற்கள், எலும்புகள், குதிரை லாடங்கள் போன்றவை கிடைத்ததால், அகழ்வாராய்ச்சி செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்நிலையில், தொல்லியல் துறை அதிகாரிகள் சிவகளை, உச்சம்பரம்பு, செக்கடி, பேட்மாநகர பரம்பு, சுந்தரலிங்க நகர பரம்பு உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து, இது தொடர்பான அறிக்கையை அனுப்பி, விரைவில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்