ஆம்புலன்ஸ் சேவை - செயல்பாடு எப்படி?

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவை குறித்த சில தகவல்களை

Update: 2018-09-05 21:42 GMT
* தமிழகத்தில் 2017ஆம் ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையை 12 லட்சத்து 39 ஆயிரத்து 254 பேர் பயன்படுத்தி உள்ளனர். 

* அதேநேரம் சாலை விபத்துகளில் சிக்கி, ஆம்புலன்ஸ் சேவைகளை பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 23 ஆயிரத்து 339 ஆக உள்ளது. 

*108 ஆம்புலன்ஸ் சேவைகளால் 73 ஆயிரத்து121  பேர் உயிர் பிழைத்துள்ளனர். 

* சாலை விபத்துகளில் சிக்கி, ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, உயிர் பிழைத்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 608 ஆக உள்ளது. 

* சாலை விபத்து நடந்த உடன், சம்பவ இடத்தை அடைய ஒரு ஆம்புலன்ஸ் எடுக்கும் சராசரி நேரமானது  2016ஆம் ஆண்டில் 18  நிமிடங்களாக இருந்தது. ஆனால் அது 2017 ஆம் ஆண்டில் 15 நிமிடங்களாக குறைந்துள்ளது. 

* தமிழகத்தில் 2016ஆம் ஆண்டில், மாதம் ஒன்றுக்கு சராசரியாக 17 ஆயிரத்து 994 சாலை விபத்து சம்பவங்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் 2017 ஆம் ஆண்டில் 18 ஆயிரத்து 611 ஆக ஆம்புலன்ஸ் சேவை உயர்ந்தது... 

* சாலை விபத்தில் சிக்கி, மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படும் போது, வழியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2016ல் 140 ஆக இருந்தது. ஆனால் அது 2017 ல் 115 ஆக குறைந்தது. 

* தமிழகத்தில் மொத்தம் 926 ஆம்புலன்ஸ் வண்டிகள் பயன்பாட்டில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

மேலும் செய்திகள்