சோபியா மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் அறிக்கையின் விவரம்...

சோபியா மீது புதுக்கோட்டை காவல்நிலையத்தில், பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

Update: 2018-09-05 02:51 GMT
சோபியாவின் பின்புலம் குறித்து உரிய விசாரணை நடத்தி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தாம் அளித்த புகாரில் கேட்டுக்கொண்டதாக முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. புதுக்கோட்டை காவல்நிலையத்தில், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்ரமணியம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில்,  சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தனியார் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, இளம் பெண் ஒருவர், பாஜக ஆட்சிக்கு எதிராக முழக்கமிட்டதாக தமிழிசை தெரிவித்ததாக குறிப்பிடப்பட்ள்ளது. எனினும் அப்போது  தான் அமைதி காத்ததாகவும் தமிழசை புகாரில் கூறியுள்ளார்.  தூத்துக்குடியில், விமானம் தரை இறங்கியவுடன் இது தொடர்பாக அந்த பெண்ணிடம் விளக்கம் கேட்டதாகவும், ஆனால் அவர் திமிராக பதிலளித்ததாகவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.  அந்த பெண்ணின் பின்புலம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாகவும், எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழிசை புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார். அதன் அடிப்படையில்   இந்திய தண்டனை சட்டம் 290 மற்றும், தமிழக மாநகர காவல்துறை சட்டம் 75 உட்பிரிவு ஒன்று மற்றும் சி, ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் சோபியா என்ற பெயர் குறிப்பிடாமல், இளம்பெண் என்றே பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்