ஈரோடு : எம்.எல்.ஏ-வுக்கு நிச்சயித்த பெண் வீட்டை விட்டு ஓட்டம்

சட்டமன்ற உறுப்பினரை திருமணம் செய்ய மறுத்து மாயமான மணப்பெண்ணை காவல்துறையினர் மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Update: 2018-09-05 02:46 GMT
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனுக்கும், உக்கரம் ஊராட்சி மில்மேடு பகுதியை சேர்ந்த சந்தியாவுக்கும் வரும் 12-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், மணப்பெண் சந்தியா கடந்த ஒன்றாம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போனதாக அவரது தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

இதனையடுத்து தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிரமாக தேடிவந்தனர். மணப்பாறையில் கல்லூரி தோழி சத்யா வீட்டில் மணப்பெண் சந்தியா இருப்பதை அறிந்த அவர்கள், அங்கு சென்று அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். 

திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் பெற்றோர்கள் வற்புறுத்தி கட்டாய திருமணம் செய்துவைக்க முயற்சித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிதாகவும் நீதிபதியிடம் 
சந்தியா தெரிவித்தார். 

இதையடுத்து சந்தியாவின் பெற்றோரை அழைத்து விருப்பம் இல்லாத பெண்ணிற்கு திருமணம் செய்துவைப்பது தவறு என்று அறிவுரை வழங்கிய நீதிபதி பெற்றோருடன் சந்தியாவை அனுப்பி வைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்