உயிரிழந்த சித்தர் 2 நாட்களுக்கு பின் கும்பகோணம் அருகே அடக்கம்

கும்பகோணம் பகுதியில் பிறந்து, புனேவில் புகழ்பெற்ற சா​மியாராக விளங்கிய ஆறுமுக சாய்பாபா என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு, திருவலஞ்சுழியில் காவிரி கரையோர ஆசிரமத்தில் தங்கியிருந்தார்.

Update: 2018-09-01 04:31 GMT
கும்பகோணம் பகுதியில் பிறந்து, புனேவில் புகழ்பெற்ற சா​மியாராக விளங்கிய ஆறுமுக சாய்பாபா என்பவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு, திருவலஞ்சுழியில் காவிரி கரையோர ஆசிரமத்தில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்ததை அடுத்து, அவரது விருப்பப்படி அந்த இடத்திலேயே அடக்கம் செய்ய பக்தர்கள் ஏற்பாடு செய்தனர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், போலீஸாரும், வருவாய் அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, தாராசுரம் பகுதியில் உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றபோது, அங்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில், கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் பகுதியில் அவரது உடல்  இன்று அதிகாலையில் அடக்கம் செய்யப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்