வாக்காளர் இறுதி பட்டியல் : ஜன 4ல் வெளியீடு

வாக்காளர் இறுதி பட்டியல், வருகிற ஜனவரி 4 ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-31 15:45 GMT
வாக்காளர் இறுதி பட்டியல், வருகிற ஜனவரி 4 ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய சத்ய பிரதா சாகு, சிறப்பு வாக்காளர் முகாம் செப்டம்பர் 9 ,  23 மற்றும் அக்டோபர் 7, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று கூறினார்.இந்த ஆண்டு இதுவரை 5 லட்சத்து 72 ஆயிரம் பேர்,வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். எனவே,  4 லட்சம் வாக்காளர்கள் குறைந்து, இறுதியாக 5 கோடியே 82 லட்சம் பேர் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்