குட்கா ஊழல் விவகாரம் - சி.பி.ஐ. தீவிர விசாரணை

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக கிடங்கு உரிமையாளர் மாதவராவிடம் சிபிஐ அதிகாரிகள் 12 மணி நேரம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர்.

Update: 2018-08-30 06:37 GMT
கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னையை அடுத்த  மாதவரத்தில் குட்கா வியாபாரி மாதவராவ் குடோனில் நடந்த வருமான வரி சோதனையின் போது கைப்பற்றப்பட்ட டைரி மூலம்,  குட்கா  ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்நிலையில், குட்கா ஊழல் விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதையடுத்து கடந்த மே மாதம் 30-ம் தேதி வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள்,  குட்கா ஊழல் விவகாரம் தொடர்பான  ஆவணங்களை  தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைத்துறையிடமிருந்து பெற்று கொண்டனர். கடந்த 3 மாதமாக  குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள் , முதற்கட்டமாக குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவிடம் விசாரணை நடத்தினர். சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர் விசாரணை நடைபெற்றது. சரமாரி கேள்விகளுக்கு மாதவராவ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குட்கா ஊழல் விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்